ட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி. மதியழகன்- ஆர். ரம்யா தயாரித்து கடந்த 17-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் "திலகர்' துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக "பிக்பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர்.

Advertisment

saranya

நாயகன் துருவாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்தும், படம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

""சில கதைகளை, "சரி.. பண்ணுவோமே' என்கிற அளவு ஈடுபாட்டுடன்தான் நடிப்போம்.. ஆனால் சில கதைகள் இதில் நாம நடிச்சே ஆகணும்னு சொல்ற அளவுக்கு சூப்பரா இருக்கும். அப்படி ஒரு படம்தான் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.'

இந்தப் படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சினைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டுப் பெண்ணாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குநர் ராகேஷ். படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட் டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் னுதான்'' சொல்வேன் என்கிறார் சரண்யா பொன்வண்ணன்.